தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிவடைந்து வருகின்ற ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்து. இந்த நிலையில் ஜூன் 17ஆம் தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை வருவதால் மாணவர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ஜூன் 17ஆம் தேதி திங்கட்கிழமை என்பதால் அதற்கு முன்னதாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. அதன் பிறகு ஜூன் மாதத்தில் எந்த ஒரு அரசு விடுமுறையும் கிடையாது.