தமிழகத்தில் திமுக தொண்டர்களுக்கு அவர் கட்சித் தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், கருணாநிதி பிறந்த நாளான ஜூன் மூன்றாம் தேதி திமுகவினர் தங்களது வீடு முன்பு “கலைஞர் 100″என்ற வரியுடன் கோலமிட்டு அவரின் பிறந்த நாளை கொண்டாட வேண்டும். உள்ளூர் மைதானங்களில் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கி ஊக்குவிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.