ஸ்பெயின் நாட்டில் செரியா மாகாணத்தில் கடந்த மாதம் 28ஆம் தேதி இளம்பெண் ஒருவர் டிக் டாக்கில் தனது நான்கு நண்பர்களுடன் லைவ் ஸ்ட்ரீமிங்கில் போட்டி ஒன்றில் பங்கேற்றுள்ளார். இந்த போட்டியில் அதிக பார்வையாளர்களை பெறும் நபரே வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள் என கூறப்பட்டிருந்தது. அவ்வாறு லைவ் ஸ்ட்ரீம்கில் பேசிக் கொண்டிருக்கும்போது அந்தப் பெண்ணை அவருடைய கணவர் கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இந்த இந்நிகழ்வு டிக் டாக் லைவில் ஒளிபரப்பாகி ஸ்பெயின் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக ஸ்பெயின் நாட்டில் பாலினம் சார்ந்த வன்முறைகளுக்கு எதிராக கடுமையான தண்டனைகள் வழங்கப்படும்.

ஆனால் இது தொடர்பாக அந்த பெண் போலீசில் புகார் அளிக்கவில்லை. ஆனால் கணவன் மனைவியை அறிந்த சம்பவம் பாலினம் ரீதியாக வன்முறையின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவருடைய கணவரை கைது செய்துள்ளனர். மேலும் இதனை அடுத்து கைது செய்யப்பட்ட கணவர் கோர்ட்டில் நேற்று ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மனைவியை தாக்கிய குற்றத்திற்காக கணவனுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. மேலும் மனைவிக்கு அருகே ஆயிரம் அடி தொலைவுக்குள் வர தடையோ அல்லது மனைவியுடன் மூன்று ஆண்டுகள் பேசுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மூன்று ஆண்டுகளில் அந்த நபர் எந்த விதமான ஆயுதங்களையும் வாங்க தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.