பொதுவாகவே தினம் தோறும் சமைக்கக்கூடிய பாத்திரங்கள் அனைத்தும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புவோம். ஆனால் சில நேரங்களில் பாத்திரம் அடி பிடித்து கருகிவிடும். இதனை அவ்வளவு எளிதில் அகற்ற முடியாது. இதனை எளிதில் அகற்றுவதற்கான சில டிப்ஸ் உங்களுக்காக.

ஸ்னாக்ஸ் சாப்பிட பயன்படுத்தப்படும் தக்காளி சாஸை பயன்படுத்தி பாத்திரத்தில் படிந்திருக்கும் கரையை எளிதில் அகற்றி விடலாம். கறை படிந்த பாத்திரத்தில் தக்காளி சாஸ் நன்கு தடவி இரவு முழுவதும் அப்படியே வைத்து விட வேண்டும். மறுநாள் காலையில் பாத்திரத்தை கழுவினால் கறைகள் அனைத்தும் நீங்கி பாத்திரம் பளபளப்பாக இருக்கும்.

அடுத்ததாக கறை பிடித்த பாத்திரத்தில் எலுமிச்சை சாற்றை நன்கு தடவை அப்படியே வைத்து விட வேண்டும். பிறகு அதில் உள்ள அமிலம் கரையை கொஞ்சம் கொஞ்சமாக நீக்கி விடும். இறுதியாக பாத்திரத்தை கழுவினால் பளபளக்கும்.

வீட்டில் ஒயின் இருந்தால் அதனை அடிப்பிடித்த பாத்திரத்தில் ஊற்றி சிறிது நேரம் ஊறவைத்த பிறகு கழுவி எடுத்தால் கறைகள் நீங்கிவிடும்.

அடுத்ததாக பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து பேஸ்ட் போன்று தயாரித்து அடிபிடித்த பாத்திரத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால் கறைகள் நீங்கும்.