மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் நகை கடை மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல தொழில்கள் செய்து வரும் தொழிலதிபர் ஒருவரின் இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனை சுமார் 30 மணி நேரம் நடைபெற்ற நிலையில் இந்த சோதனையின் போது 7 கார்களில் இருந்து பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

அது மட்டுமல்லாமல் பர்னிச்சர் பொருட்களுக்குள் கட்டு கட்டாக மறைத்து வைக்கப்பட்டிருந்த பணம் என மொத்தம் 26 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 90 கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள் இன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.