நாடு முழுவதும் தாய்ப்பாலை விற்பனை செய்வதற்கு எந்தவித அனுமதியும் இல்லை என்று FSSAI தெரிவித்துள்ளது. இதுபோன்று தாய்ப்பாலை வணிகமாக்கும் எந்த ஒரு செயலுக்கும் அனுமதி வழங்க வேண்டாம் என்றும் மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் மருத்துவமனையில் உள்ள குழந்தைகளுக்கு தானம் செய்யப்பட்ட தாய்ப்பாலை வழங்குவதற்கு எந்த தடையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.