இந்தியாவில் மக்களுக்கு உதவும் நோக்கத்தில் தனியார் நிறுவனங்கள் சார்பாகவும் அரசு சார்பாகவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி எல்ஐசி நிறுவனம் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகின்றது. அதாவது எல்ஐசி சாரல் பென்ஷன் யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது.

இந்த திட்டத்தில் 40 முதல் 80 வயது வரை உள்ளவர்கள் இணைந்து பயன்பெற முடியும். இதில் ஒரு முறை முதலீடு செய்தால் மட்டும் போதும். 30 லட்சம் ரூபாய் மதிப்பில் வருடாந்திரம் வாங்கினால் மாதம் 12500 வாழ்நாள் ஓய்வூதியமாக கிடைக்கும் என்று கூறுகின்றனர். பாலிசிதாரர் உயிரிழந்தால் செலுத்தப்பட்ட முதலீடு நாமினிக்கு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.