கர்நாடக மாநிலம் பெங்களூரில் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு மது கடைகள் மூடப்படும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற ஜூன் 1 முதல் ஜூன் 6-ம் தேதி வரை மதுபானங்கள் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மற்றும் எம்எல்சி இடங்களுக்கான தேர்தலும் நடைபெற இருப்பதால் மதுபான கடைகள் மற்றும் பார்கள் என அனைத்தையும் மூட அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். இதனால் மது பிரியர்கள் முன்னதாக மதுபானங்களை வாங்கி வைக்கும் ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.