மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள நீமூச் மாவட்டத்தில் ‌ தினேஷ் சிலாவத் என்பவர் என்பவர் வசித்து வருகிறார். இவர் போர்வை வியாபாரி. இவருக்கு திருமணமாகி ரஜினி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் ரஜினி நிறை மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் நேற்று மதியம் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் தன்னுடைய மனைவியை தினேஷ் நீமுச் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் மருத்துவமனை ஊழியர்களா பெண்ணை அனுமதிக்க மறுத்ததோடு உதய்பூர் மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறியுள்ளனர். இதனால் தினேஷ் செய்வது அறியாது திகைத்துள்ளார்.

அப்போது அவருடைய மனைவிக்கு பிரசவ வலி அதிகமான நிலையில் அருகில் இருந்தவர்கள் ஆட்டோவை துணியால் மறைத்துள்ளனர். பின்னர் அவருக்கு ஆட்டோவில் குழந்தை பிறந்தது. இதை தொடர்ந்து தாயும் சேயும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது நலமாக இருக்கிறார்கள். இந்நிலையில் கர்ப்பிணியை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் மயக்க மருந்து டாக்டர் விடுமுறையில் இருப்பதால்தான் பிரசவம் பார்க்க மறுத்ததாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.