ஒடிசா மாநிலத்தில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி பேசினார். அப்போது அவர் ஒடிசாவின் வளங்களை தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கொள்ளையடிக்க முயற்சிப்பதாக கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது, பிஜூ ஜனதா தள அரசு நிலம், நிலக்கரி, மணல் மற்றும் சுரங்க கொள்ளை கும்பல்களை வளர்க்கிறது.

மாநில வளங்களை கொள்ளையடிக்க  எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், அவர்களுடைய ஆதரவாளர்கள் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இடைவிடாது முயற்சி செய்து வருகிறார்கள். எனவே ஒடிசாவில் பாஜக ஆட்சி வந்தால் இம் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக நியமிக்கப்படுவதோடு அனைத்தும் பாதுகாக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் கொள்ளையடிக்க முயற்சிக்கிறார்கள் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.