இந்தியாவில் பெரும்பாலான மக்கள் நீண்ட தூர பயணங்களுக்கு ரயிலை தேர்வு செய்கின்றனர். குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். அப்படி ரயிலில் பயணிக்கும் போது தொலைதூர ரயில் பெட்டிகளின் ஜன்னல் மீது வெள்ளை, மஞ்சள் மற்றும் பச்சை நிற கோடுகள் இருப்பதை அனைவரும் பார்த்திருப்போம்.

அது ஏன் என்று தற்போது தெரிந்து கொள்ளலாம். வெள்ளை நிறக் கோடு இருப்பின் அது முன் பதிவு இல்லாத ஒரு பயணிக்கும் பெட்டி என்று அர்த்தம், மஞ்சள் நிற கோடு இருப்பின் மாற்றுத்திறனாளி மற்றும் நோயாளிகளுக்கான சிறப்பு பெட்டி என்று அர்த்தம், பச்சை நிற கோடு இருப்பின் மகளிர் சிறப்பு பெட்டி என்று பொருள்படும்.