உத்திரபிரதேசம் மாநிலம் கபூர் பகுதியில் அசோக் நகர் என்ற இடம் உள்ளது. இங்கு சங்கர்லால் என்பவருக்கு திருமணம் நடைபெறுவதாக இருந்தது. அதன்படி மணமேடையில் மணமகன் மற்றும் மணமகள் இருவரும் ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக்கொண்டனர். அப்போது மணமகன் மணமகளுக்கு முத்த மழை பொழிந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண் வீட்டார் மேடையில்  ஏறி எப்படி முத்தம் கொடுக்கலாம் என சண்டை போட்டனர். அதற்கு மணமகன் மணமகள் தான் முத்தம் கேட்டதாக கூறினார்.

இருப்பினும் அவர்கள் அதைக் கேட்கவில்லை. இதனால் மணமகன் மற்றும் மணமகள் வீட்டாற்கு இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் பெண்ணின் தந்தை உட்பட 6 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது மணமகன் கட்டாயப்படுத்தி பெண்ணுக்கு முத்தம் கொடுத்ததாக மணமகள் வீட்டார் கூறினார். இதைத்தொடர்ந்து இரு வீட்டார் தரப்பை சேர்ந்த 7 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் கடைசியில் திருமணம் நிறுத்தப்படுவதாக இரு வீட்டாரும் அறிவித்தனர்.