உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள முசாபர் நகர் என்ற மாவட்டத்தில் 15 வயது சிறுவன் ஒருவன் 50 வயது முதியவரை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த நபர் சிறுவனை பலாத்காரம் செய்து தன்னுடைய ஃபோனில் வீடியோ எடுத்துள்ளார்.

அந்த வீடியோவை காட்டி மிரட்டியது மட்டுமல்லாமல் அடிக்கடி சிறுவனை பலாத்காரம் செய்துள்ளார். இதனால் கோபமடைந்து இந்த கொலையை செய்ய நேரிட்டதாக போலீஸ் விசாரணையில் அந்த சிறுவன் தெரிவித்துள்ளான். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.