சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்துள்ள புல்லாகவுண்டம்பட்டி அக்ரகாரம் பகுதியில் கோகுல் மற்றும் சுகமதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் மகளிர் குழுவில் வாங்கிய கடனை அடைப்பதற்காக கோகுல் மனைவியுடன் சண்டை போட்டு உள்ளார். இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு நடந்த சண்டையில் கோகுலை சுகமதியை கடுமையாக தாக்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பெரியம்மா வீட்டுக்கு சென்ற கோகுல் 10 நாட்கள் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. செல்போன் மூலம் தொடர்பு கொண்டும் எடுக்காததால் ஐஸ்கிரீமில் விஷம் கலந்து குழந்தைகளை கொன்று விட்டு சுகமதி தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து கோகுலை, தற்கொலைக்கு தூண்டியதாக கூறி போலீசார் கைது செய்துள்ளனர்.