தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கோதை ஆறு, பழையாறு, பெரியாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்த நிலையில் பழையாற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் ஆற்றில் குளிக்கவும் செல்ஃபி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.