கோவையை சேர்ந்த காதல் தம்பதிகள் இருவர் வசித்து வந்துள்ளனர் . அவர்கள் வேலை இல்லாமல் தவித்து வந்த நிலையில் ஈரோட்டை சேர்ந்த தன்னுடைய கணவரின் நண்பரான தரன் என்பவரிடம் வேலை ஏற்பாடு செய்து தருமாறு அந்த பெண் கேட்டுள்ளார். பின்னர் இருவரையும் வரச் சொல்லி வேலை கொடுப்பதாக தரன் கூறி இருக்கிறார். அப்பொழுது நிதி நிறுவனத்தில் வேலை வாங்கி கொடுப்பதாக கூறி தன்னுடைய நண்பனின் மனைவியை மட்டும் தரன் பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார்.

அப்பொழுது யாரும் இல்லாத இடம் பார்த்து வண்டி நிறுத்தி அந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் இதுகுறித்து  யாரிடமும் கூறக்கூடாது என்று மிரட்டி இருக்கிறார். இதனையடுத்து அந்தப் பெண் போலீசில் அளித்த புகாரின் பேரில் தரண் கைது செய்யப்பட்டுள்ளார்.