மதுரை மாவட்டம் மேலூர் அருகே 9 வயது மாணவன் ஒருவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கத்தப்பட்டி என்ற கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் உருது பயிற்சி பள்ளியில் பீகாரை சேர்ந்த ஒன்பது வயது மற்றும் 13 வயது மாணவர்கள் பயின்று வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த 13 வயது மாணவன் 9 வயது மாணவனை கொடூரமாக குத்தி கொலை செய்துள்ளான்.

அது மட்டுமல்லாமல் சிறுவனின் உடலை கழிவுநீர் தொட்டியில் மறைத்து வைத்துள்ளான். இது தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றியதுடன் வழக்கு பதிவு செய்து மற்றொரு சிறுவனை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.