திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு நகர வீதிகளில் நெற்றியில் கொம்பு முளைத்த அதிசய மாடு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டது. அதனை ஏராளமான மக்கள் வியப்புடன் பார்த்தனர். பின்னர் வாழைப்பழம் உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கி மாட்டை தொட்டு வணங்கி சென்றனர். மேலும் ஏராளமானோர் அதிசய மாட்டுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.