தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குரும்பூர் அருகே இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்ய முயன்ற இரண்டு வாலிபர்கள் உயிரிழந்தனர். குளைக்காநாதபுரத்தைச் சேர்ந்த நண்பர்களான பிரதீப் குமார், ஜீவானந்தம் ஆகியோர் கோவில் திருவிழா பணிகளை முடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அவர்களது நண்பரான பூபதி ராஜா மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார்.

இந்நிலையில் மூவரும் பயணத்தின் போது சாகசங்களில் ஈடுபட்டுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஜீவானந்தமும், பிரதீப் குமாரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்தபோது ராஜாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.