சென்னையில் இருந்து நேற்று காலை கன்னியாகுமரி சென்று அதிவிரைவு ரயில் ஏசி பெட்டியில் மழை நீர் கசிந்ததால் பயணிகள் அவதிப்பட்டனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் மாலை சென்னை கன்னியாகுமரி விரைவு ரயில் புறப்பட்டது. அந்த ரயில் செல்லும் வழிகளில் தொடர்ந்து கனமழை பெய்தது. அப்போது ரயிலின் மேற்கூரையிலிருந்து மழை நீர் கசிய தொடங்கியுள்ளது. குறிப்பாக ஏசி பெட்டிகளில் மின் கம்பி செல்லும் பகுதிகளில் இருந்து மழை நீர் இருக்கைகளில் சிந்தியதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இரவு நேரத்தில் படுத்து உறங்க முடியாமல் பலர் நின்றபடி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் அந்த ரயில் மிகவும் ரயில் அசுத்தமாக இருந்துள்ளதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். வழக்கமாக சென்னையில் இருந்து வரும்போது ரயில்கள் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் சுத்தம் செய்யப்படும். ஆனால் கடந்த சில மாதங்களாக சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்படுவதில்லை என பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே அதனை சரி செய்ய ரயில்வே துறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.