வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி அருகே இருக்கும் லட்சுமிபுரம் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆந்திர எல்லையை ஒட்டி இருக்கும் லட்சுமிபுரம் பகுதிக்கு செல்ல சாலை வசதி கிடையாது. இதனால் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் குருநாதபுரம் பகுதியில் தனி நபருக்கு சொந்தமான ஒரு ஒற்றை அடி பாதையை பயன்படுத்தி தங்கள் ஊருக்கு வந்து சென்றனர்.

இப்போது அந்த தனிநபர் பாதையை அடைத்துவிட்டார். இதனால் வேறு வழி இல்லாமல் 2 கிலோ மீட்டர் தூரம் சுற்றி இந்த கிராமத்திற்கு செல்லும் மழை நீர் ஓடை வழியாக பொதுமக்கள் பயணிக்கின்றனர். மழை நேரத்தில் அந்த பாதையையும் பயன்படுத்த முடியாது. இதனால் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே லட்சுமிபுரம் கிராமத்திற்கு பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.