மாணவர்களுடைய வாசிப்பு திறனை மேம்படுத்துவதற்காக வழிகாட்டி கையேடு வெளியிடப்பட்டுள்ளது. சிறு புத்தகங்கள் மூலமாக மாணவர்களுக்கு வாசிப்பின் மீது உள்ள ஆர்வத்தை உண்டாக்கி தொடர் வாசிப்பை செயல்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கம். ஒரு கதை ஒரு புத்தகம் 16 பக்கங்கள் என்ற அடிப்படையில் புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இது தவிர ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை வாசிப்பு இயக்க புத்தகங்கள் தொகுப்பு வழங்கப்படும்.
நான்கு முதல் 9 வரை உள்ள வகுப்புகளுக்கு கால அட்டவணையில் நூலக பாடங்களில் இருப்பது உறுதி செய்யப்படும். இலக்கிய மன்ற செயல்பாடுகள் தமிழ் மற்றும் ஆங்கில மொழி சார்ந்த நடவடிக்கைகள் அனைத்திலும் வாசிப்பு இயக்க புத்தகங்கள் பயன்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
