மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை குறைந்தபட்சம் ரூ.2000 முதல் அதிகபட்சம் ரூ.14,000 வரை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. 1-5ம் வகுப்பு வரை ரூ. 2000, 6-8ம் வகுப்பு வரை ரூ.6000, 9-12ம் வகுப்பு வரை ரூ.8000 உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு ரூ.12000, முதுகலை பட்டம் மற்றும் தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.14,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளது