கொல்கத்தா ராஜஸ்தான் அணிகள் மோதிய நேற்றைய ஆட்டத்தில் முதலில் ஆடிய கொல்கத்தா அணி 150யை டார்கெட் ஆக நிர்ணயம் செய்தது. ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரராக ஜெய்ஸ்வால் – ஜாஸ் பட்லர் களமிறங்கினர். 3 பந்துகளை எதிர்கொண்ட பட்லர் டக் அவுட் ஆகி வெளியேற ஜெய்ஸ்வால், ருத்ர தாண்டவ ஆட்டம் ஆடினார். வெறும் 13 பந்துகளில் அரை சதம் அடித்த ஜெய்ஸ்வால்,

13வது ஓவரின் முதல் பந்தில் போர் அடிக்க அணியின் ஸ்கோர் 151 எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 47 பந்துகளை எதிர் கொண்ட ஜெய்ஸ்வால் 98 ரன்களிலும், 29 பந்துகளை எதிர்கொண்ட கேப்டன் சஞ்சு சாம்சன் 48 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்தனர். மிகவும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் இரண்டு ரண்களில் சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதே இரண்டு ரன்னில் ஐபிஎல் இந்த சீசனுக்கான அதிக ரன்கள் எடுத்து ஆரஞ்சு கேப் வெல்லும் வாய்ப்பையும் நூலிலையில் தவறவிட்டார்.

இந்த ஐபிஎல் சீசனில் அதிக ரன் அடித்த வரிசையில் இந்த ஐபிஎல் சீசனில் அதிக ரன் அடித்த வரிசையில் 576 ரன்களுடன் பாப் டு பிலஸ்ஸி முதலிடத்தில் உள்ளார். ஜெய்ஸ்வால் 575 ரன்னுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். ஒருவேளை நேற்றைய ஆட்டத்தில் அவர் இரண்டு ரன் அடித்து சதத்தை பூர்த்தி செய்து இருந்தால் அதிக ரன் குவித்தவர் வரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறி ஆரஞ்சு கேப்பையும் தன தாக்கியிருப்பார். இரண்டு ரன்னில் சதத்தையும், ஆரஞ்சு கேப்பையும் ஜெய்ஸ்வால் தவறவிட்டது ராஜஸ்தான் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது.