இந்தியாவின் பல்வேறு இடங்களில் 16-வது ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. ஐபிஎல் போட்டியை காண்பதற்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில் டிக்கெட் வாங்குவதற்கு கூட்டம் அலைமோதும். இந்நிலையில் CSK-KKR இடையிலான கடைசி லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் மே.14ம் தேதி நடைபெற உள்ளது. இப்போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனை இன்று தொடங்க உள்ளது.

ரூ.1500, ரூ.2000, ரூ.2500 டிக்கெட்டுகளை இணையத்திலும், நேரிலும் வாங்கிக் கொள்ளலாம். ரூ.3000, ரூ.5000 டிக்கெட்டுகள் இணையதளத்தில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என CSK நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் இன்று காலை முதலே டிக்கெட் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.