சமூக வலைதளங்களில் தற்போது ஒரு வீடியோ பெரும் அதிர்ச்சியையும், பயத்தையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு தந்தை, நள்ளிரவு 3 மணிக்கு தனது மகளின் அறையில் இருந்து சிரிப்பு சத்தம் கேட்டு அதிர்ச்சியுடன் அறைக்குள் செல்கிறார். அங்கே, தனது சிறுமி அலமாரிக்கு அருகில் தரையில் அமைதியாக அமர்ந்திருக்கிறார்.

முதலில் அது சாதாரணமான காட்சியாகத் தோன்றினாலும், சில விநாடிகளில், அலமாரியில் இருந்து இரு மர்மமான கைகள் வெளியில் வந்து சிறுமியின் தலைமுடியுடன் விளையாட ஆரம்பிக்கின்றன. இதைக் கண்ட தந்தை அதிர்ச்சியில் உறைந்து செல்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Scary_Encounter5 (@scaryencounter)

வீடியோவில் அந்த இடத்தில் ஒரு பொம்மை தவிர வேறு எதுவும் இல்லாதது தெரிய வருகிறது. சிறுமியை அவர் கையால் அசைக்க முயற்சிக்கிறார், ஆனால் அவள் எந்தவொரு உணர்வும் இல்லாமல் அமைதியாக அமர்ந்திருப்பதைக் காணலாம். இந்த வீடியோ Instagram-இல் @scaryencounter என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

தற்போது இது ஆயிரக்கணக்கான பார்வைகள் பெற்று வைரலாக பரவி வருகிறது. பலரும் அதனைப் பார்த்து “இது உண்மையான ஆவி சம்பவமா?”, “இந்த வீடியோ பார்த்ததும் உடம்பே திகிலடிச்சுருச்சு!” என்றெல்லாம் கருத்துகள் தெரிவித்துள்ளனர்.

இது உண்மையா, போலியா என்பதைப் பற்றி பலர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். ஒரு நபர், “தந்தை ஏன் முதலில் மகளை காப்பாற்றாமல் வீடியோ எடுக்கிறார்?” என்று கேட்டிருக்க, இன்னொருவர் “இது பக்காவான ஸ்கிரிப்ட் மாதிரி இருக்கு, ஆனா பயமா இருக்கு” என்று பதிவிட்டுள்ளார்.

வீடியோ எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்ற தகவல் இல்லை என்பதால் நம்பகத்தன்மை குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன. எனினும், இது போன்ற வீடியோக்கள் சமூக ஊடகங்களில் மக்கள் மனதில் வியப்பையும், பயத்தையும் ஒரே நேரத்தில் தூண்டி வைரலாகும் நிலையில், இந்த வீடியோவும் கவனத்தை ஈர்த்துவிட்டது.