தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், சிங்கப்பூரில் வசித்து வரும் லட்சுமண பெருமாள் என்பவருக்கு எதிராக தற்போது அதிரடியாக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தவெக எம்எல்ஏ-வை குறிவைத்து அரசியல் ரீதியாகவோ அல்லது பண பலத்தை கொண்டோ பேரம் பேசப்பட்டதாக கூறப்படும் இந்த விவகாரம், தற்போது சர்வதேச அளவில் சட்டரீதியான நடவடிக்கையாக உருவெடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

​இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பான மிக முக்கிய டிஜிட்டல் மற்றும் ஆவண ஆதாரங்களை லட்சுமண பெருமாள் சிங்கப்பூரில் இருந்தபடியே திட்டமிட்டு அழித்துவிட்டதாக அவர் மீது மேலும் ஒரு அதிரடிப் புகார் எழுந்துள்ளது. ஆதாரங்களை அழித்துவிட்டு சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முயன்ற லட்சுமண பெருமாளை இந்தியாவிற்கு கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்துவதற்காக, லுக் அவுட் நோட்டீஸ் மூலம் போலீசார் தங்களது அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளனர்.