தமிழக பாஜக சார்பில் மும்மொழிகல்விக் கொள்கைக்கு ஆதரவு கொடுத்து கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்ட நிலையில் சென்னையில் அரசு பள்ளி மாணவர்களை வலுக்கட்டாயமாக அவர்கள் கையெழுத்து போட வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல பாதுகாவலர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தற்போது பாஜகவினர் ஐந்து பேரை கைது செய்துள்ளனர். மேலும் அதன்படி எஸ்ஜி சூர்யா, சுந்தரம், கோடீஸ்வரன், மோகன் மற்றும் அன்பரசு ஆகியோரை கண்ணகி நகர் போலீசார் கைது செய்துள்ளனர்.
