தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை அதிமுக கட்சியில் இருந்து நீக்கிய பிறகு கட்சியில் பல்வேறு விதமான சலசலப்புகள் நிலவியது. தற்போது எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக மாறிவிட்டதால் இனி அதிமுக ஓபிஎஸ் வசம் வராது என்பதுதான் அரசியல் பார்வையாளர்களின் கருத்து. இதனால் ஓபிஎஸ் அரசியலில் எதிர்காலம் என்னவாகும் என கேள்விக்குறி எழும்பிய நிலையில் அவர் நேற்று முன்தினம் டிடிவி தினகரனை சந்தித்து பேசினார். அதன்பிறகு டிடிவி தினகரனும் நானும் இனி ஒன்றாக இணைந்து செயல்பட போவதாக கூட்டாக அவர்கள் பேட்டி கொடுத்தனர்.

இந்நிலையில் நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓபிஎஸ் விரைவில் சசிகலாவை சந்திப்பேன் என கூறியுள்ளார். டிடிவி தினகரனை தற்போது சந்தித்து பேசியது போன்று சசிகலாவையும் விரைவில் சந்திப்பேன் என்று கூறினார். டிடிவி தினகரன், ஓபிஎஸ் மற்றும் சசிகலா ஆகியோர் இணைந்தால் தென் மாவட்ட வாக்குகளை பெருவாரியாக பெறலாம் என கணக்கு போட்டு வைத்துள்ளனர். இது இபிஎஸ் அணிக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அக்கட்சியை சேர்ந்த முக்கிய புள்ளிகள் பலரும் விமர்சித்து வருகிறார்கள். மேலும் சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் இணைந்து கூட்டாக செயல்பட்டால் கண்டிப்பாக அரசியல் வட்டாரத்தில் கண்டிப்பாக மாற்றும் நிகழும் என்று கூறப்படுகிறது.