தென் கிழக்கு வங்கக்கடலில் நேற்று முன்தினம் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் அது நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இதனைத் தொடர்ந்து தென்கிழக்கு வங்க கடலில் மே பத்தாம் தேதி யான இன்று மாலை மோக்கா புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென் கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் இடையே மே 14ஆம் தேதி இந்த புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தென்கிழக்கு வங்க கடலில் வலுவடைந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேற்கு வட மேற்கு திசையில் நகரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.