நெல்சன் திலீப்குமார் டைரக்டு செய்யும் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினி நடித்து வருகிறார். கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் உடன் ரஜினி கூட்டணி அமைத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக பிரபல மலையாள நடிகர் மோகன்லால் ஜெயிலர் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் இப்படத்தில் பிரபல நடிகர் ஒருவர் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி தெலுங்கு நடிகர் சுனில் ஜெயிலர் படத்தில் இணைந்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 2021 ஆம் வருடம் வெளியான அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் சுனில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.