வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் சென்ற 11 ஆம் தேதி வெளியான திரைப்படம் வாரிசு. இந்த படம் குடும்ப ரசிகர்கள் இடையே நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. தற்போது வாரிசு படத்தின் இயக்குனர் வம்சி நெகட்டிவ் விமர்சனங்கள் பற்றி பேசி உள்ளார். அதாவது, ஒரு படம் எடுக்க ஒவ்வொருவரும் எவ்வளவு கஷ்டப்படுகின்றனர் தெரியுமா?. ஆனால் அதையெல்லாம் யோசிக்காமல் படத்தை பற்றி நெகட்டிவ்வான விஷயங்களை பரப்புகின்றனர்.

அதோடு படம் சீரியலை போல இருக்கிறது என விமர்சனம் செய்கிறார்கள். சீரியல் எனில் அவ்வளவு சாதாரண விஷயமா?. அதுவும் ஒரு கிரியேட்டிவ் வேலை தான் என வம்சி கோபமாக பேசியுள்ளார். அதனை தொடர்ந்து ரசிகர்கள் வம்சியின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தால் அதை ஏற்றுக்கொள்ளாமல் கோபமாக பேசுவதா எனவும் கஷ்டப்படுறதுக்கு தான் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறீர்கள் எனவும் அவரை கடுமையாக ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.