விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் 6 முடிவுக்கு வரப் போகிறது. சென்ற அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி 100 நாட்களை நெருங்கிவிட்டது. யார் 6வது சீசன் வெற்றி வாய்ப்பை வெல்லப்போவது என்ற விவரத்தை அரிய ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

கடைசியில் பிக்பாஸ் 6 வீட்டிலிருந்து ஏடிகே வெளியேறியிருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிநாட்களில் பணப்பெட்டி வைப்பது வழக்கம் ஆகும். அதன்படி இந்த முறையும் அப்படி ஒரு பண மூட்டை வைக்கப்பட்டது. இதையடுத்து போட்டியாளர் கதிரவன் அந்த பண மூட்டையை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.