
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் எதிராக அமலாக்க துறையினர் ஏற்கனவே பண மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் தற்போது 538 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டு இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இந்தியா, லண்டன், துபாய் உள்ளிட்ட இடங்களில் உள்ள சொத்துக்களை முடக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பல்வேறு நிறுவனங்களுக்கு சொந்தமான கிட்டத்தட்ட 17 குடியிருப்புகள், வணிக வளாகங்கள், அத்தனையும் முடக்கப்பட்டுள்ளது என அமலாக்கத்துறை தெரிவித்து இருக்கிறார்கள். அதேபோல் ஜெட் ஏர்வேஸ் லிமிடெட், ஜெட் ஏர்வேஸ் எண்டர்பிரைசஸ்,
ஜெட் ஏர்வேஸ் லிமிடெட் நிறுவனத் தலைவராக இருக்கக்கூடிய நரேஷ் கோயல் மற்றும் அவருடைய மனைவி அனிதா கோயல் மற்றும் மகன் நிப்பான் கோயல் ஆகியோருக்கு சொந்தமான இடங்களும் முழுமையாக அமலாக்க துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் பண மோசடி வழக்கில் நரேஷ் கோயல் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருக்கின்றார். அவருடன் சேர்ந்து 5 பேர் மீது அமலாக்கத்துறை ஏற்கனவே குற்றப்பாத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருக்கின்றது. கனரா வங்கியின் 538 கோடி ரூபாய் வாங்கி பண மோசடியில் ஈடுபட்டு இருப்பதாக குற்றம் சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் சொத்துக்கள் முடக்கப்பட்டிருப்பதாக அமலாக்க துறையினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருக்கிறார்கள்.
ED has provisionally attached properties worth Rs 538.05 Crore under the provisions of PMLA, 2002 in the money laundering investigation against M/s Jet Airways (India) Limited (JIL). The attached properties include 17 residential flats/bungalows and commercial premises in the… pic.twitter.com/jJAOTaYG3o
— ED (@dir_ed) November 1, 2023