மத்திய மந்திரி ஜெய்சங்கர், இந்தியாவிற்கு மிக அருகில் தீவிரவாத மையம் இருப்பதாக பாகிஸ்தானை குற்றம் சாட்டியுள்ளார்.
ஆஸ்திரியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டிருக்கும் மத்திய வெளிவிவகார மந்திரியான ஜெய்சங்கர், அந்நாட்டின் வெளி விவகார மந்திரி அலெக்சாண்டர் ஸ்காலன்பர்க்கை சந்தித்திருக்கிறார். அதன் பிறகு இருவரும் செய்தியாளர்களை சந்தித்த போது, ஜெய்சங்கர் பேசியதாவது, தீவிரவாதத்தினால் சர்வதேச அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் உண்டான அபாயங்கள் குறித்து ஆஸ்திரிய நாட்டு தலைவர்களோடு கலந்துரையாடினேன்.
எல்லையை தாண்டி நடக்கும் வன்முறை, தீவிரவாதம் போன்றவை குறித்தும் பேசியிருக்கிறோம். சட்ட விரோதமான முறையில் ஆயுதங்கள் விற்பது, போதை பொருள் கடத்தல், மற்ற சர்வதேச குற்றங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பில் உள்ளன. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் தீவிரவாத விளைவுகளை ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்குள் அடக்க முடியாது.
இந்த தீவிரவாதத்தின் மையம், இந்தியாவிற்கு மிகவும் அருகில் அமைந்திருக்கிறது. எங்களது கவனமும் அனுபவங்களும் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்து இருக்கிறார்.