பாகிஸ்தானை சேர்ந்த நடிகைகளை உளவு வேலைகள் பார்க்க பயன்படுத்துவதாக ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ அதிகாரி அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறார்.
பாகிஸ்தானில் ராணுவ அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற மேஜர் அடில் ராஜா, கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் நாட்டிலிருந்து காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு, இங்கிலாந்தில் இருக்கும் அவரின் குடும்பத்தினரோடு இருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், அவர் தன் youtube சேனலில் சமீபத்தில் அதிர வைக்கும் தகவல்களை தெரிவித்தார். அதாவது, பாகிஸ்தானின் சக்தியான அமைப்புகள் நாட்டின் நடிகைகளை உளவு பார்க்க பயன்படுத்துகிறது என்று கூறினார். அவர்களின் பெயரை குறிப்பிடாமல் முதல் எழுத்துக்களை கூறியிருந்தார். அந்த வீடியோ இணையதளங்களில் அதிக அளவில் பரவி வருகிறது.