அமெரிக்க நாட்டின் நியூயார்க் மாகாணத்தில் முதல்முறையாக ஒரு பெண் ஆளுநராக  பதவியேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க நாட்டில் கடந்த வருடம் நவம்பர் 8-ஆம் தேதி அன்று நாடாளுமன்றம் மற்றும் மாகாண ஆளுநர்களுக்கு தேர்தல் நடைபெற்றது. அதன்படி, நியூயார்க்கின் ஆளுநர் பதவிக்கு ஜனநாயக கட்சியினுடைய கேத்தி ஹோச்சுல் என்ற பெண் போட்டியிட்டார். குடியரசு கட்சியைச் சேர்ந்த லீ செல்டின் அவருக்கு எதிராக களமிறங்கினார்.

இதில், கேத்தி ஹோச்சுல் லீ செல்டினை தோற்கடித்து நியூயார்க் நகரின் 57வது ஆளுநராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். மேலும் மாகாணத்தின் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமை அவருக்கு கிடைத்திருக்கிறது. நேற்று அவர் ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்டார்.