மனித உடல்களை உரமாக்க அனுமதி வழங்கி இருக்கும் அமெரிக்க மாகாணங்களின் பட்டியலில் சமீபத்திய மாகாணமாக நியூயார்க் இணைந்து உள்ளது. இதன் வாயிலாக ஒரு நபர் இறந்த பிறகு தன் உடலை மண்ணாக மாற்றிக் கொள்ளலாம். உடலை எரித்தல் (அ) அடக்கம் செய்தல் ஆகியவற்றுக்கு மாற்றான சுற்றுச் சூழலுக்கு நன்மை பயக்கும் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. இம்முறையில் மனித சடலம் ஒரு கண்டெய்னரில் அடைக்கப்படும்.

பல வாரங்கள் கழித்து அந்த உடல் மக்கிப் போகும். சென்ற 2019 ஆம் வருடம் இந்த முறையை முதன் முதலாக சட்டப்பூர்வமாக்கிய அமெரிக்க மாநிலமாக வாஷிங்டன் இருக்கிறது. அதன்பின் கொலராடோ, ஓரிகான், வெர்மான்ட் மற்றும் கலிபோர்னியா போன்றவை இதை பின்பற்றியது. கடந்த சனிக்கிழமை அன்று மாகாண ஆளுநர் கேத்தி ஹோச்சுல் அனுமதி வழங்கியதை அடுத்து இப்பட்டியலில் 6வது அமெரிக்க மாகாணமாக நியூயார்க் இணைந்து உள்ளது.