செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, நான் அம்மா காலத்துல நான் பார்த்திருக்கிறது, சம்மர்ல தண்ணி தாகம்….  அதுக்காக லாரில தண்ணி வரும். அப்ப கூட நான் அம்மா எல்லாம் பேசிட்டு இருக்கும்போது,  நினைச்சோம். ஒரு நாளைக்கு மெட்ரோ வாட்டர் என சொல்றாங்க….  1000 லாரி, 1,500 லாரி வருதுன்னு சொல்றாங்களே…. அது பத்தியே ஒரு டிஸ்கஷன் நாங்க பண்ணுனோம்.

அப்படி என்றால் ?  சென்னையில ஃபுல்லா ட்ராபிக் ஜாம் ஆயிடுமே,  அவ்வளவு லாரி ஒரு நாளைக்கு எப்படி வர முடியும் ? அப்போ சரியான வகையில் தண்ணீர் மக்களுக்கு போய் சேரல, அப்படிங்கற ஒரு சந்தேகம் எங்களுக்கு இருந்தது….  அம்மாவுடைய ஆட்சி காலத்துல… ஒரு சீப் மினிஸ்டரா அவங்க வீட்டில இந்த டிஸ்கஷன் எல்லாம் சொல்லி இருக்காங்க.

அதன்பிறகு தான் ரொம்ப ஸ்பீடா வீராணம் திட்டத்தை கொண்டு வந்ததுக்கப்புறம் தான்…..  தண்ணீர் லாரியை  ரொம்ப பார்க்க முடியாது… எல்லாருக்கும்  தண்ணி கொடுக்கிறதுக்கு உண்டான ஏற்பாட்டை நாங்க பண்ணுனோம்.  இப்ப திமுக அரசு வந்ததும் என்ன செய்து ? தண்ணீருக்கு நாங்க சப்ளை கொடுத்துட்டோம். அதனால என்ன பண்றாங்க ?

கழிவுநீருக்கு மாலை நேரம் ஆச்சுன்னா….   எல்லாரும் ஆபீஸ் போறவங்க  எல்லாம்  முடிஞ்சதுக்கு அப்புறம்… 7 மணி, 7.30 மணிக்கு மேல பாத்தீங்கன்னா…. எங்க பாத்தாலும் கழிவுநீர் வண்டி தான் நிக்குது. தண்ணியை டேப் பண்ணி எடுத்துட்டு போய்,  கூவத்துலதண்ணீரை ஊற்றிக்கொண்டு இருக்காங்க. இது யாரை ஏமாற்றுவதற்காக செய்றாங்கன்னு தெரியல எனக்கு ? இந்த மாதிரியான ஒரு கவர்மெண்ட் இன்னைக்கு தமிழ்நாட்டுல இருக்கு.

நான் அம்மா கூட இருந்து ஃபுல்லா பார்த்து இருக்கேன். அரசாங்க மெஷின் எப்படி ஒர்க் பண்ணும் ? எப்படி இயங்கும் ? அப்படிங்கறத முழுசா தெரிஞ்சவ நான். அதனால எனக்குள்ள உள்ள ஆதங்கத்தை நான் வேற வழி இல்ல,  உங்க கிட்ட தான் நான் சொல்லி ஆகணும் என தெரிவித்தார்.