அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை திவால் ஆனவர் என அறிவித்து 2001 இல் அமலாக்கத்துறை பிறப்பித்த நோட்டீஸ் செல்லாது என ஐகோர்ட் தெரிவித்தது. நோட்டீசை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

அபராத தொகை கடன் தான் என்பதால் அதை செலுத்தாத போது திவால் ஆனவர் என அறிவிக்க கோரும் மனு விசாரணைக்கு உகந்தது. மனு விசாரணைக்கு உகந்தது தான் என்பதால் மீண்டும் நோட்டீஸ் அனுப்ப அமலாக்க துறைக்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் விதிக்கப்பட்ட ரூபாய் 28 கோடி அபராதத்தை செலுத்தாததால் டிடிவி தினகரனை திவால் ஆனவர் என அறிவித்தது. நோட்டீசை எதிர்த்த தினகரன் வழக்கை  ஏற்று நோட்டீசை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டதில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.