தமிழியக்கம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசும்போது,தமிழ்நாட்டுல தமிழுக்காக கிட்டத்தட்ட 20,000 இயக்கங்கள் இருக்கின்றது. 20, 000 இயக்கங்கள் தமிழுக்காக தமிழ்நாட்டில கடந்த 50 60 ஆண்டுகளாக நடத்திட்டு இருக்காங்க. அப்போ இவ்வளவு இயக்கங்கள் நடத்தியும்,  நாம்  வெற்றி பெற்றோமா,  இல்ல வெற்றிக்கு அருகிலேயே சென்றோமா,  இல்லை. இன்னும் நீண்ட கால பயணம் நமக்கு இருக்கின்றது. நீண்ட காலம் பயணம் இருக்கின்றது. இன்னும் நாம் வெற்றி கிட்ட கூட போகல. அதை உறுதி செய்கின்ற வகையில் நம்முடைய வேந்தர் அவர்கள் தலைமையிலே நிச்சயமாக நல்ல இயக்கம், தமிழ் இயக்கம்.

இப்போ தமிழ்நாட்டுல பல வெற்றிகளை நாம பார்த்திருக்கிறோம்.   உதாரணத்திற்கு  ஜல்லிக்கட்டு. ஏழு நாட்களில் ஒரு இயக்கமாக மாறியது ஜல்லிக்கட்டு.   அது மூமென்ட். மக்கள் இயக்கம். 7 நாட்கள் தான்.   முடியாதுன்னு சொன்ன உச்ச நீதிமன்றம் 7 நாட்கள் அவர்களுடைய தீர்ப்பை மாற்றிக் கொண்ட ஒரு சூழல் தமிழ்நாட்டில உருவாக்கியது.

ஜல்லிக்கட்டுக்கு உருவாக்கிய அந்த சூழல் ஏன் நம்முடைய தாய் மொழிக்கு உருவாக முடியாதா ? நாம எல்லோரும் ஒன்று சேர்ந்து… நாம் எல்லோரும் அரசியல் கடந்து…. நம்முடைய வேற்றுமை எல்லாம் கடந்து… நம்முடைய தாய் மொழி…  உலகத்தின்  பலமையான தாய் மொழியை நம்முடைய அடுத்த தலைமுறைகளில் அதை பின்பற்ற வேண்டும். பெருமையாக அதை பார்க்க வேண்டும் வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும்.

சூழல்கள், சந்தர்ப்பங்கள் ,அவர்களுக்கு உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு நாம் எல்லாம் கடக்க வேண்டும். அதற்கு நம்முடைய வேந்தர் அவர்களுக்கு இந்த நேரத்திலே நன்றியை தெரிவிக்கின்றேன். நிச்சயமாக உங்களது பணி சிறக்கட்டும். நாங்கள் இருக்கின்றோம். நிச்சயமாக நம்முடைய இலக்கு. நம்முடைய தாய் மொழியை உலகில் முதன்மை மொழியாக நாம் மாற்றுவோம் என தெரிவித்தார்.