ஜாதி ரீதியான கணக்கெடுப்பு நடத்தப்படும் பட்சத்தில் மட்டும் தான் உண்மையான சமூக நீதி இங்கு காக்கப்படும் அப்படிங்கறது எங்களுடைய கருத்து. மக்களுடைய எண்ணிக்கையின் அடிப்படையில் அதுல கல்வி ரீதியாக, பொருளாதார ரீதியாக, பின்தங்கி இருக்கக்கூடியவர்களுக்கு இடஒதுக்கீடு  சரியாக சென்றடையும்.

அதனால பீகாரை போல உடனடியாக தமிழகத்திலும்,  பல நூறு ஆண்டுகளாக சமூகநீதியை காக்கக்கூடிய மாநிலம் என்று சொல்லக்கூடிய இந்த அரசு,  உடனடியாக ஜாதி ரீதியான கணக்கெடுப்பை நடத்தி அதை வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி நான் எல்லா சமுதாய மக்களையும் சந்தித்து பேசிக்கொண்டு இருக்கின்றேன் என தெரிவித்தார்.