செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா, பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 7 – 8 மாசம் தான் இருக்கு என  நீங்க சொன்னீங்க. இப்போ நடக்க போகிறது பார்லிமென்ட் எலக்சன். நிச்சயமாக இந்த பார்லிமென்ட் எலக்சன்ல தேமுதிகவின் நிலை என்ன ? என்பதை நிச்சயமாக உங்களுக்கு பிரஸ்மீட் கூப்பிட்டு நாங்கள் சொல்லுவோம்.

ஆனால் ஒரு விஷயம் இதுவரைக்கும் அம்மையார் ஜெயலலிதா இருந்தப்போ 40 தொகுதிகளில் ஜெயிச்சாங்க,  அதற்குப் பிறகு திமுகவும் 38 தொகுதிகளும் ஜெயிச்சிருக்காங்க. ஆனால்  எம்பிக்களாக ஜெயித்தவர்கள்,  தமிழ்நாட்டுக்கு என்ன இதுவரைக்கும் செய்திருக்கிறார்கள் ? என்ற கேள்வியை தேமுதிக சார்பில் நான் எழுப்புகின்றேன்.

வெறும் எம்பிக்களாக டெல்லிக்கு போறாங்க –  வர்றாங்களே ஒழிய,  தமிழ்நாட்டிற்கு வேண்டிய உரிமையை இதுவரைக்கும் இரண்டு கழகங்களும் பெற்றுத்தரவில்லை என்பதை இந்த நேரத்தில் நான் உறுதியாக பதிய வைக்க விரும்புகிறேன். இன்னைக்கு எத்தனையோ பிரச்சனைகள் தமிழ்நாட்டில் நடந்திருக்கிறது. ஊழல் – கள்ளச்சாராயம், எங்கு பார்த்தாலும் தமிழகம் போதை தமிழாக மாறியிருக்கிறது.

லஞ்சம் ஊழல் தலைவிரித்தாடி கொண்டு இருக்கிறது,  எல்லா பக்கமும் கனிம வள கொள்ளை மிக அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது. வெறும் ரெய்டு போறாங்க.  ரெய்டுக்கு அப்பறம் என்ன ? அப்படிங்கறதை மக்களுக்கு புரிய வைக்கிறது கிடையாது. இதுபோல வெறும் தேர்தலுக்கான ஒரு ஆட்சியாகவும் – தேர்தலுக்கான ஒரு அரசியலாக மட்டுமே இல்லாமல்… நம்பி வாக்களித்த மக்களுக்கு – ஜெயிப்பவர்கள் உறுதியாக என்ன வாக்குறுதி கொடுத்தார்களோ ? அதை நிறைவேற்றக்கூடிய ஒரு அரசாங்கம்  இருக்கணும்னு சொல்லி நான் கேட்டுக்குறேன் என தெரிவித்தார்.