ஜம்மு காஷ்மீரில் நடப்பு ஆண்டே சட்டசபை தேர்தல் நடைபெற வாய்ப்பு இருக்கிறது. தேர்தலுக்கு தயாராக இருப்பதாக அனைத்து அரசியல் கட்சிகளும் ஏற்கனவே அறிவித்துள்ளனர். இந்த யூனியன் பிரதேசத்தில் அரசியல் வெற்றிடம் இருப்பதாகவும், அதை நிரப்ப வேண்டும் என்றும் தேர்தல் ஆணையர் ராஜூவ் குமார் அறிவித்துள்ளார்.

மேலும் சுற்றுச்சூழல், பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொண்டு தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதைத் தவிர்த்து ஜம்மு காஷ்மீரில் முன்கூட்டியே சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற வாய்ப்பு இருக்கிறது என மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார்.