பிரிட்டனில் 36 வயதுடைய நபர், ஜூலை மாதத்தில் ஒரு பெண்ணின் வீட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தார். ஆனால் திருடர்களைப் போல அல்லாமல், இவர் வீட்டிற்குள் நுழைந்தபின் அங்கு உணவை சமைத்து, வீட்டு வேலைகளைச் செய்தார். அந்த நபர், திருட்டில் ஈடுபடாமல், பெண்ணின் துவைக்கப்பட்ட ஆடைகளை காயவைத்து, ஃபிரிட்ஜில் பொருட்களை அடுக்கி வைத்ததோடு, அந்த பெண்ணுக்கு உணவும் சமைத்தார். பின்னர், “கவலைப்படாதே, சாப்பிட்டு சந்தோஷமாக இரு” என ஒரு குறிப்பும் எழுதி வைத்துச் சென்றார்.
இதைப் பார்த்த பெண் அதிர்ச்சியடைந்தார். சம்மந்தப்பட்ட நபர் புகாரின் அடிப்படையில் கடந்த ஜூலை மாதம் கைதானார். இந்தக் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது, அவர் மனநலக் குறைபாடால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அந்தக்காரணத்தால் இந்த விசித்திரமான நடவடிக்கையில் ஈடுபட்டதாக என்று நீதிமன்றத்தில் விளக்கமளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நீதிபதி, அந்த நபருக்கு 22 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்தார். அவர் மனநல சிகிச்சை பெற வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தினார். இந்த சம்பவம் பிரிட்டனில் மக்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.