இஸ்ரேலின் வடக்கு எல்லையான லெபனான் மீது தொடர் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் நடத்தி வருகிறது. இதைத்தொடர்ந்து செப்டம்பர் 23ஆம் தேதியிலிருந்து லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. மேலும் மவுண்ட் லெபனானில் 2பேர் படுகொலை செய்யப்பட்டனர்.15 பேர் பலத்த காயமடைந்தனர். அதேநேரத்தில் பால்பெக் ஹெர்மலி கவர்னரேட்டில் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
பெக்கா பிராந்தியத்தில் மேலும் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் 14 பேர் படுகாயம் அடைந்தனர்.தெற்கு கவர்னரேட்டில் மேலும் 5 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 37 பேர் காயமடைந்தனர்.இந்தத் தாக்குதலை நடத்துவதற்கு முன்பாக இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்த உள்ள 50 கிராம மக்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பின்பு இஸ்ரேல் இராணுவத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் முதலில் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. இந்த தாக்குதலில் மொத்தம் 2000 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இவ்வாறு லெபானின் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.