சமூக வலைதளங்களில் பாம்பு தொடர்பான வீடியோக்கள் அடிக்கடி வைரலாகின்றன, ஆனால் இப்போது பரவி வரும் ஒரு வீடியோ பார்ப்போரின் மனதை உறைய வைக்கிறது. பூமியில் மிகவும் ஆபத்தான, விஷமிக்க பாம்புகளில் ஒன்றான கிங் கோப்ராவுடன் (King Cobra Snake) ஒருவர் விளையாடுவது போல் தோன்றும் இந்த வீடியோ, 88 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளையும், 1.88 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ளது.

இதில், பிரபல பாம்பு பிடிப்பவர் முரளிவாலா ஹவுஸ்லா (Murliwale Hausla), 12 அடி நீளமுள்ள இந்த ஆபத்தான கிங் கோப்ராவை அதன் இயற்கை வாழிடத்தில் விடுவிக்க செல்கிறார்.

வீடியோவில், பையில் இருந்து வெளியே வரும் கிங் கோப்ரா உடனடியாக தனது படத்தை விரித்து, முரளியை எதிர்க்கிறது. இந்த காட்சி உண்மையிலேயே பதற வைப்பதாக இருக்கிறது.

ஆனால், முரளி அச்சமின்றி, இந்த பாம்பை தனது செல்லப் பிராணி போல கையாள்கிறார். கோபமடைந்த கோப்ரா பலமுறை தாக்க முயன்றாலும், அவரது திறமையால் அதை கட்டுப்படுத்தி, சிறிது நேரம் விளையாடிய பின், பாம்பை காட்டில் விடுவிக்கிறார்.

இந்த பரபரப்பான காட்சிகள், பார்ப்போரை திகைக்க வைக்கின்றன. @MurliwaleHausla யூடியூப் சேனலில் பகிரப்பட்ட இந்த வீடியோ, பழையதாக இருந்தாலும், தற்போது மீண்டும் ட்ரெண்டாகி, நெட்டிசன்களிடையே பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.