சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, பார்ப்பவர்களை ஆச்சரியத்திலும் சிரிப்பிலும் ஆழ்த்தியுள்ளது. @mubassir039 என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், ஒரு இளைஞர் ‘’டாடி லிட்டில் பிரின்சஸ்”  என நினைத்து ஒரு பெண்ணிடம் கேள்வி கேட்கிறார்,

ஆனால் அவரது பதில் அவரையும், 70 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களையும் தலைகீழாக்கியது. பூங்காவில் நடந்து சென்ற இரு பெண்களை நிறுத்தி, “நீங்கள் ஒரு கடையில் 5 கிலோ உருளைக்கிழங்கு வாங்கினீர்கள், மற்றொரு கடையில் 5 கிலோ சமோசா வாங்கினீர்கள், எது அதிக எடை?” என்று கேட்கிறார்.

இளைஞர், வைரல் மீம்களைப் போல தவறான பதில் வரும் என எதிர்பார்த்தார், ஆனால் பெண்ணின் பதில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

 

View this post on Instagram

 

A post shared by Mubassir Raza (@mubassir039)

பெண் உறுதியாக, “சமோசா” என பதிலளிக்கிறார். இளைஞர் உடனே, “அட, இரண்டுமே 5 கிலோதானே!” என கிண்டல் செய்ய, பெண் முழு தன்னம்பிக்கையுடன், “சமோசாவுடன் சட்னியும் வருது, உனக்கு அது தெரியாதா?” என பதிலடி கொடுக்கிறார்.

இந்த புத்திசாலித்தனமான பதில், இளைஞரையும் பார்ப்பவர்களையும் மூளையை சுற்ற வைத்தது. வீடியோவில் அமிதாப் பச்சனின் 7 கோடி மீமுடன், “வாஹ் தீதி வாஹ்!” என எழுதப்பட்டுள்ளது.

நெட்டிசன்கள் இந்த பெண்ணின் துரித பதிலை பாராட்டி, “முதல் முறையாக ஒரு பெண் புத்திசாலித்தனமாக பதில் சொல்லியிருக்கிறார்”, “பெண்கள் சமூகத்தின் மானத்தை காப்பாற்றிவிட்டார்” என கமெண்ட் செய்கின்றனர். “தீதி பையனின் வாயை அடைத்துவிட்டார்!” என்று ஒருவர் கலகலப்பாக பதிவிட்டார்.