இயற்கையின் அதிசயங்கள் நம்மை வியப்படைய வைக்கும், அதேசமயம் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் – அதில் முதலைகளும் ஒரு பகுதி. ‘நீரின் பேய்’ என்று அழைக்கப்படும் இந்த ஆபத்தான உயிரினங்கள், வேட்டையாடும் காட்சிகளை நாம் அநேகமாக பார்த்திருப்போம். ஆனால், அவை முட்டையில் இருந்து வெளியேறும் தருணத்தை நீங்கள் கண்டிருக்கிறீர்களா?

சமூக ஊடகங்களில் இப்போது வேகமாகப் பரவும் இந்த வீடியோ, பார்வையாளர்களை அதிர வைத்துள்ளது. இதில், சிறிய முதலை முட்டையில் இருந்து வெளியே வருவது தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

இந்த வைரல் வீடியோவில், ஒரு டப்புக்குள் பல சிறிய முதலைகள் இருப்பதைக் காணலாம். அங்கு ஒரு நபர் முட்டையை உடைக்கிறார் – முதலைகளுக்கு உணவாகக் கொடுக்கும் முட்டை போல இருக்கலாம் என்று தோன்றலாம். ஆனால், முட்டை உடைந்த உடன் உண்மை வெளிப்படுகிறது.

அதில் இருந்து ஒரு சிறிய முதலை வெளியே வந்து, அந்த நபரின் கையில் பிடிக்கப்படுகிறது. இந்த சிறிய உயிரினம் அழகாகத் தோன்றினாலும், அதன் கண்கள் அச்சுறுத்தலாகத் தெரிகின்றன. இந்த 20 வினாடிகள் நீளமுள்ள காட்சி, முன்பு யாரும் பார்க்காத அரிய தருணத்தைப் பதிவு செய்துள்ளது

@AMAZlNGNATURE ஐடியில் பகிரப்பட்ட இந்த வீடியோ, 70 லட்சத்திற்கும் மேல் பார்வைகளையும், 30 ஆயிரம் இக்குகளையும் பெற்றுள்ளது. ஒரு பயனர் ‘இந்த முதலை அது அளவுள்ள முட்டையில் எப்படி பொருந்தியிருக்கும்’ என்றும், மற்றொருவர் ‘முட்டையில் இருந்து வெளியேறும் உயிரினங்களை உதவியின்றி விட்டுவிட வேண்டும், அது அவற்றை வலிமையாக்கும்’ என்றும், இன்னொருவர் ‘முதலைகள் முட்டையில் இருந்து எப்படி வெளியேறுகின்றன என்பதை முதல் முறையாகப் பார்த்தேன், இது திரைப்பட காட்சியைப் போன்றது’ என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.