செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, நாளுக்கு நாள் நானும் கடந்த ஐந்து, ஆறு ஆண்டுகளாய் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் போய்க்கொண்டிருக்கிறேன். இன்றைய தினம் ஒரு மிகப் பெரிய எழுச்சி…. 10 கிலோமீட்டர் மக்கள் இருந்து பாரத பிரதமர் அவர்களை வரவேற்று,  அந்த நிகழ்ச்சியில உற்சாகத்தோடு கலந்து கொண்டு இருப்பது, தமிழகத்தில் அரசியல் களமானது வேகமாக மாறி வருகிறது என்பதை நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

ஏன் என்று சொன்னால் ?  கடந்த ஒரு மாதத்தில் சென்னையிலிருந்த வெள்ளமாக இருக்கலாம், தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு ஆகியவற்றிலே மக்களுக்கு மாநில அரசாங்கத்தினுடைய செயல்பாட்டில் மிகப்பெரிய அளவில் அதிருப்தி இருக்கிறது. ஆகவே, பாரதிய ஜனதா கட்சி அதனுடைய தலைமையில் ஒரு கூட்டணியில்  போட்டியிடும் என்கிற எதிர்பார்ப்பு மக்களிட்ட இருக்கிறதுனால….  இப்போது மக்களுடைய பார்ட்டிசிபேஷன், வரவேற்பு, உற்சாகம் அதிகமாக இருக்கிறது.

மற்ற மாநிலங்களில் ஏற்கனவே இது மாதிரி நிறைய நடந்திருக்கு. தமிழ்நாட்டுலயும் மாண்புமிகு பிரதமர் பெயரை சொன்னால் உற்சாகம்…  இன்னைக்கு சோசியல் மீடியா டிரென்டிங்கிலும் வணக்கம் மோடிங்றது ரொம்ப பிரபலமாக மக்களால் பதியப்பட்டு இருக்கு. ஆனால அதனுடைய வெளிப்பாடாகத்தான் நான் நினைக்கிறேன்.

இருந்தாலும் நம்ம சில சமயத்துல உற்சாகத்தை கம்மி பண்ணி இருக்கணும். ஆனால்  உற்சாகத்தை வெளிப்படுத்த வேண்டிய அவசியமும் இருக்கு அப்படிங்கிறத தெரிவிச்சிக்கிறேன். மோடிஜி அவர்கள் வந்தா மக்களுக்கு உற்சாகம் தமிழ்நாட்டிலேயும் அதிகமா இருக்கு. இருந்தாலும் ஒரு முதலமைச்சர் பேசும் பொழுது, நாம அதையும் கூட கொஞ்சம் வந்து அடக்கி வாசிச்சிருக்கலாம். ஆனால்,   ஒர்க்கர்ஸ்னுடைய உற்சாகத்தை நாம கட்டுப்படுத்துவது கஷ்டம் தான் என தெரிவித்தார்.